பணம் பறித்த வாலிபர் கைது

காரைக்குடியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-04-13 15:48 GMT
காரைக்குடி,

காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 39).இவர் சந்தைப்பேட்டை அருகே நடந்து சென்ற ேபாது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி ரவிக்குமார் சட்டையில் இருந்த ரூ.450-ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை விரட்டி பிடித்து தெற்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மானாமதுரை அருகே உள்ள பழைய காளையார்கோவில் ரஸ்தா பகுதியை சேர்ந்த அசோக் குமார் (19) என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்