குழந்தை இல்லாத விரக்தியில் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி, சிகிச்சை பலனின்றி கணவன் சாவு

வேலூர் அருகே குழந்தை இல்லாத விரக்தியில் விஷம்குடித்து தம்பதி தற்கொலைக்கு முயன்றனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி கணவர் உயிரிழந்தார்.

Update: 2021-04-13 14:35 GMT
அடுக்கம்பாறை

குழந்தை இல்லை

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த சாத்துமதுரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 40), ஓட்டல் நடத்தி வந்தார். இவரது மனைவி கவிதா (36). இவர்களுக்கு திருமணமாகி சுமார் 25 ஆண்டுகள் ஆகிறது. பல மருத்துவமனைகளில் சென்று பரிசோதனை செய்தும் இதுவரை இவர்களுக்கு குழந்தை இல்லை. 

இதனால் மனமுடைந்து விரக்தி அடைந்த கணவன், மனைவி இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரளி விதையை அரைத்து குடித்து, தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் செல்வம் மற்றும் கவிதாவை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

கணவன் சாவு

மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செல்வம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவிதாவுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்