165 பேருக்கு கொரோனா

மேலும் 165 பேருக்கு கொரோனா

Update: 2021-04-13 14:09 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தினமும் சராசரியாக 150க்கும் மேல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்றுள்ளது.  இந்தநிலையில் நேற்று மாவட்டத்தில் மேலும் 165 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 80 பேர் குணமடைந்துவீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 968 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 420 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 230 ஆக உள்ளது. மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1318 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்