மடத்துக்குளம்
மடத்துக்குளம் பகுதியில் உள்ள பழனி உடுமலை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த சாலையின் ஓரத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த நிழல் தரும் மரங்களின் கீழ் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா செல்பவர்கள் அனைவரும், கடுமையான வெயில் காலங்களில் அமர்ந்து சற்று இளைப்பாறி விட்டு செல்வர்.
ஆனால் இந்த மரங்களை, சில சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு, மதுபோதையில் தீ வைக்கின்றனர். இன்னும் சிலர் குப்பைகளை மரத்தடியில் போட்டு குளிர் காய்வதற்காக தீ வைப்பதால் மரங்களும் தீயில் கருகி உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து மரங்களுக்கு தீ வைக்கும் மர்ம ஆசாமிகளை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.