குடிமங்கலத்தில் அரசு பள்ளி அருகே கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும்

குடிமங்கலத்தில் அரசு பள்ளி அருகே கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது

Update: 2021-04-13 13:16 GMT
குடிமங்கலம்
குடிமங்கலத்தில் அரசு பள்ளி அருகே கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது
அரசுப் பள்ளி
குடிமங்கலம் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்உள்ளன. குடிமங்கலத்தை சுற்றிலும் நூற்பாலைகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இங்கு உள்ள குப்பைகள் மற்றும் கழிவுகள் முறையாக அகற்றப்படாமல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கொட்டப்படுகிறது. கழிவுகள் கொட்டப்படும் இடத்தின் அருகே குடி மங்கலத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் குட்டை காணப்படுகிறது.
 குப்பை கழிவுகள் இரவு நேரங்களில் தீ வைக்கப்படுவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது பொள்ளாச்சி- தாராபுரம் நெடுஞ்சாலை அருகில் குப்பைகள் கொட்டப்படுவதால் சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழைக்காலங்களில் கழிவுகளில் மழைநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
சுகாதார சீர்கேடு
கிராமப்புறங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளைமக்கும் குப்பை, மக்காத குப்பை எனமுறையாக தரம் பிரித்து உள்ளாட்சி அமைப்புகள் அழிக்கவேண்டும். ஆனால் அவைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே குப்பைகளை கொட்டுவது தொடர்கதையாகி வருகிறது. மழைக்காலங்களில் குப்பைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. 
குப்பைகள் கொட்டப்படும் இடத்தின் அருகில் நீர்நிலைகள் உள்ளதால் நீர்நிலை மாசடையும் சூழல் உள்ளது. எனவே அரசு பள்ளி அருகே குப்பைகளை கொட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

---
குடிமங்கலத்தில் அரசு பள்ளி அருகே குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடப்பதை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்