தாளவாடி அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

தாளவாடி அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-04-12 22:42 GMT
தாளவாடி
தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் முக்கிய தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயத்தை சார்ந்த கூலி தொழிலாளிகள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தொட்டகாஜனூரில் இருந்து மெட்டல்வாடி செல்லும் சாலையில் உள்ள அங்கன்வாடி மற்றும் சுகாதார நிலையம் முன்பு குப்பைகள் மற்றும் கழிவுபொருட்கள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசிவருகிறது.
இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளன. சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்