அந்தியூர் அருகே கஞ்சா விற்றவர் கைது
அந்தியூர் அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்
அந்தியூர் அருகே உள்ள தாசரியூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தாசரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தாசரியூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (வயது 42) என்பதும், அவர் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிதாசை கைது செய்தனர்.