ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்த இடங்கள்- கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாநகராட்சி
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 146 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஈரோடு மாநகராட்சியில் ஏ.ஓ.கே.நகர், வளையக்கார வீதி, பழையபாளையம், ரங்கம்பாளையம், பெரியவலசு, ஜகதாபுரம்காலனி, குமரன்நகர், லட்சுமி நகர், மாரப்பவீதி, கீரமடை, பூசாரி சென்னிமலை 2-வது மற்றும் 5-வது வீதிகள், பிருந்தாவன் அப்பார்ட் மெண்ட், செல்வம்நகர், ரெயில்வே காலனி, பெரியண்ணன் வீதி, சாமியப்பா 3-வது வீதி, முத்து வேலப்பா மெயின்ரோடு, மாணிக்கம்பாளையம், அருள்வேலவன்நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 78 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சத்தியமங்கலம்
இதேபோல் பவானி நகராட்சியில் வேர்வராயன்பாளையம், சலங்கபாளையம், சாத்தநாயக்கனூர் ஓரிச்சேரி, குருப்பநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 16 பேரும், புஞ்சைபுளியம்பட்டி நேரு நகரை சேர்ந்த 13 பேரும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ராமர் எக்ஸ்டன்சன், செங்கோட்டையன் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 8 பேரும், பெருந்துறை, வெட்டையன்கிணறு, கந்தாம்பாளையத்தை சேர்ந்த 11 பேரும்,
கொடுமுடி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்த 3 பேரும், ஈரோடு மின்சார வாரிய அலுவலக ரோட்டில் 3 பேரும், தாளவாடி அருகே உள்ள தொட்டகாஜனூரை சேர்ந்த 3 பேரும், சென்னிமலையில் பெரியவலசு ராக்மவுண்ட் சிட்டி, வெள்ளிரான்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேரும், சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை பகுதியை சேர்ந்த 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், மாநகர் நல அதிகாரி முரளிசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.