ராமர் கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவ திருவிழா

விருதுநகர் ராமர் கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2021-04-12 21:10 GMT
விருதுநகர், 
விருதுநகர் ராமர் கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி பல்வேறு மண்டகப்படிகளில் கஜ வாகனம், சப்பரம், சேஷ வாகனம், கருடாழ்வார் வாகனம், சூரிய பிரபை, சந்திரப்பிரபை வாகனங்கள், கிருஷ்ணர் வெற்றி போர் சப்பரம், அனுமந்த வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமர்- சீதா திருக்கல்யாண வைபவம் வருகிற 22-ந் தேதி மாலை நடைபெறுகிறது. விழாவையொட்டி தினமும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையும், 8 மணிக்கு திருமஞ்சனமும், திருவாராதனை பூஜையும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்