வளநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம், 8 பவுன் நகை திருட்டு

வளநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம், 8 பவுன் நகை ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

Update: 2021-04-12 20:22 GMT
வளநாடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 
ரூ.50 ஆயிரம், 8 பவுன் நகை திருட்டு
துவரங்குறிச்சி, ஏப்.13-
வளநாடு அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 30). இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு ஆடு மேய்க்க தோட்டத்துக்கு சென்றார். பின்னர் மதியம் சாப்பிட வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த ரூ.50 ஆயிரம், 8 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்