மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-12 20:22 GMT
திருச்சி, 
திருச்சியை அடுத்த திருவெறும்பூர் கீழ முல்லைக்குடியைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவர் நேற்று முன்தினம் திருச்சி காந்தி மார்க்கெட் கமான் வளைவு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பூ வாங்குவதற்காக மார்க்கெட்டிற்குள் சென்றார். திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசில் அவர் உடனே புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்த ஷேக் தாவூதை (வயது 30) கைது செய்து, அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

மேலும் செய்திகள்