கடையம் அருகே பஸ்-லாரி மோதல்; பெண் பலி

கடையம் அருகே பஸ்-லாரி மோதியதில் பெண் பலியானார்.

Update: 2021-04-12 20:14 GMT
கடையம்:

நாகர்கோவிலில் இருந்து தென்காசிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. கடையம் அருகே எல்லைபுளி அருகில் சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் பஸ் சாலையோரமாக பாய்ந்தது.

அப்போது பஸ்சில் இருந்த சிவகாசி பெரியார் நகரைச் சேர்ந்த அகத்திய முதலியார் மகள் சங்கரி என்பவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி வழியாக வெளியே தூக்கி வீசப்பட்டார். அப்போது அவரது மீது பஸ்சின் டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் பஸ் டிரைவரான நாகர்கோவில் பழவூரைச் சேர்ந்த பழனி (வயது 52) மற்றும் சிலர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், கடையம் போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சங்கரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்