முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-04-12 20:02 GMT
அச்சன்புதூர்:

கடையநல்லூர் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி தலைமையில் நகரசபை பணியாளர்கள், சப்-இன்ஸ்பெக்டர் முத்து திலகர் ஆகியோர் கடையநல்லூர் மருத்துவமனை பஸ் நிறுத்தம், பஜார், கிருஷ்ணாபுரம், புதிய பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது முககவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், சாலையில் சென்றவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் கொரோனா விதிமுறைகள் கடைகளில் பின்பற்றப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர்.

இதேபோல் செங்கோட்டை நகர பகுதி மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ் நிலையங்களில் செங்கோட்டை தாசில்தார் ரோசன்பேகம் தலைமையில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போது, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பஸ்களில் ஏறி அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் முககவசம் அணியும்படி அறிவுரை கூறப்பட்டது. 

செங்கோட்டை வனத்துறை சோதனை சாவடி சந்திப்பில் செங்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலா் வெங்கடேஸ்வரன் தலைமையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் நகரின் முக்கிய வீதிகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் சாலையில் நடந்து வருபவா்கள், பொதுமக்கள் வாகன ஓட்டிகளிடம் முககவசம் அணியாதவர்களிடம் அறிவுரை கூறி அபராதம் விதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்