கொரோனா தொற்று ஏற்பட்டதால் விஷம் குடித்து முதியவர் சாவு

கொரோனா தொற்று ஏற்பட்டதால் விஷம் குடித்து முதியவர் பலியானார்.

Update: 2021-04-12 19:21 GMT
நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 73 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்ததில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அந்த முதியவரை ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.

இதனால் மனமுடைந்த அந்த முதியவர் திடீரென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி  அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்