கும்பகோணத்தில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி 80-க்கும் மேற்பட்டோருக்கு செலுத்தப்பட்டது
கும்பகோணத்தில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கும்பகோணம்:-
கும்பகோணத்தில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
கும்பகோணம் நகராட்சி சார்பில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், தாராசுரம் அறிஞர் அண்ணா காய்கறி மார்க்கெட் பணியாளர்கள், வியாபாரிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கும்பகோணம் அனைத்து தொழில் மற்றும் வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த 45 வயதுக்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
80-க்கும் மேற்பட்டவர்கள்
கும்பேஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி தொடங்கி வைத்தார். கும்பகோணம் நகர் நல அலுவலர் டாக்டர் பிரகாஷ் முன்னிலையில் செவிலியர்கள் கும்பகோணம் பகுதி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.
இதில் 80-க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில் கும்பகோணம் அனைத்து தொழில் வியாபாரிகள் சங்க தலைவர் மகேந்திரன், செயலாளர் சத்திய நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.