சாலை விபத்தில் தம்பதி படுகாயம்
சாலை விபத்தில் தம்பதி படுகாயம் அடைந்துள்ளனர்.
நொய்யல்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே பொத்தனூர் புதுத் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 59). இவரது மனைவி கிருஷ்ணவேணி (55). இவர்கள், கரூர் மாவட்டம் கட்டிபாளையத்திற்கு வெற்றிலை கொடிக்கால் வேலைக்கு செல்வதற்காக பொத்தனூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே வந்தபோது வலதுபுறம் திரும்பி ஓரமாக சென்றனர். அப்போது அதே சாலையில் பின்னால் கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரி ராமபுரம் தெருவை சேர்ந்த ஸ்ரீகுமார் (21) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், சுந்தரம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணவன்-மனைவியும் படுகாயம் அடைந்தனர். ஸ்ரீகுமார் லேசான காயம் அடைந்தார். இதையடுத்து கணவன்-மனைவியும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் ஸ்ரீகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.