லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-12 18:37 GMT
குளித்தலை
குளித்தலை காவிரிநகர் பகுதியில் குளித்தலை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மகாமுனி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற அதே பகுதியை சேர்ந்த ஷாஜகான் (வயது 36), பழையகோர்ட் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (60) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.1,200-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்