குடியாத்தத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

குடியாத்தத்தில் கொரோனாவுக்கு முதியவர் பலி

Update: 2021-04-12 18:35 GMT
குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பலர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று பரவிவருகிறது. குடியாத்தம் போடிப்பேட்டை பகுதியை சேர்ந்த 82 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதைத்தொடர்ந்து அங்கேயே சிகிச்சை பெற்றுவந்த முதியவர் நேற்று காலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கொரோனா தொற்றால் கடந்த மாதம் 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்