குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்ததால் பரபரப்பு

உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை குப்பை தொட்டியில் பச்சிளம் குழந்தை பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-12 18:27 GMT
உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பின்புறம் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் கிடந்த குப்பைகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்கள் வந்தனர். அப்போது குப்பைத்தொட்டிக்குள் இருந்த பையில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று பிணமாக கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த துப்புரவு பணியாளர்கள் இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திற்கும், உளுந்தூர்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் டாக்டர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த குழந்தையின் உடலை கைப்பற்றினர்.  மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தை இறந்து பிறந்ததால் குப்பை தொட்டியில் வீசிச் சென்றார்களா? அல்லது கள்ளக்காதலில் பிறந்ததால் கொலை செய்து வீசிச் சென்றார்களா? எனவும், குழந்தையை வீசிச் சென்ற கல்நெஞ்சம் படைத்த நபர் யார்? எனவும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்