மருத்துவ முகாம்
லாலாபேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அரசு தொடக்கப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் டாக்டர் சமீரா தலைமையிலான மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல், மற்றும் பல்வேறு வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். பின்னர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றை பரிசோதனை செய்து உடனுக்குடன் முடிவு தெரியப்படுத்தப்பட்டது. இதில் பகுதிநேர சுகாதார செவிலியர் சாந்தி, சுகாதார ஆய்வாளர்கள் கண்ணன், கிஷோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.