கலவை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற மினி வேனில் தீ விபத்து.மின்கம்பி உரசியதால் எரிந்து நாசமானது

கலவை அருகே வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற மினி வேனில் தீ விபத்து

Update: 2021-04-12 17:40 GMT
கலவை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கன்னி கிராமத்தை சேர்ந்த அருமைராஜ் மகன் லியோ குழந்தையேகா (வயது 21). இவர் நேற்று முன்தினம் செய்யாறு தாலுகா பளந்தை கிராமத்தில் வைக்கோல் வாங்கி, அதை மினிவேனில் ஏற்றிக்கொண்டு ஏனாதவாடி- மேல்நெல்லிரோடு வழியாக சென்று கொண்டிருகுந்தார்.

 அப்போது ரோட்டின் மேல் தாழ்வாக சென்ற மின்கம்பி வைக்கோல் பாரம் ஏற்றிச்சென்ற வேன்மீது உரசி தீப்பிடித்தது. வேனில் இருந்த லியோ குழந்தையேகா, ரமேஷ் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். வேன் முழுவதும் வைக்கோலுடன் எரிந்து சாம்பலானது. கவல் அறிந்ததும் செய்யாறு தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைத்தனர். 

இதுகுறித்து லியோகுழந்தையேகா,கலவை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சரவணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

-

மேலும் செய்திகள்