கொரோனா குறித்து ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக போலீசார் விழிப்புணர்வு

கம்பத்தில் கொரோனா குறித்து ஒலிபெருக்கி மூலம் வீதி, வீதியாக போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2021-04-12 17:06 GMT
கம்பம்:
தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர். 
மேலும் அவர்களுக்கு கொரோனா குறித்தும், முககவசம் அணிய வேண்டிய அவசியம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கம்பத்தில் இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, கீதா தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போலீஸ் ஜீப், மோட்டார் சைக்கிள்களில் ஒலிபெருக்கி பொருத்தப்பட்டு அவற்றின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
மேலும் அவர்கள் பல்வேறு இடங்களில் முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கி இனிவரும் காலங்களில் எப்போது வெளியே வந்தாலும் முககவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்