கிணற்றில் வாலிபர் பிணம்

பேரையூர் அருகே கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்தார்.

Update: 2021-04-12 16:58 GMT
பேரையூர்,

பேரையூர் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 28). இவர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஒரு கிணற்றில் இறந்து கிடந்தார். இது குறித்து கிராம பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர் குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். அவர் சாப்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று செல்வராஜின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்