அவினாசி தாலுகா அலுவலகத்தில் அலுவலருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அலுவலகம் 3 நாட்கள் மூடப்பட்டது.

அவினாசி தாலுகா அலுவலகத்தில் அலுவலருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அலுவலகம் 3 நாட்கள் மூடப்பட்டது.;

Update: 2021-04-12 16:02 GMT
அவினாசி
அவினாசி தாலுகா அலுவலகத்தில் அலுவலருக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் அலுவலகம் 3 நாட்கள் மூடப்பட்டது.
கொரோனா பரவல்
கொரோனா பரவல் அனைத்து பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, அந்தவகையில் பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துதல் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவினாசி வட்டாரத்தில் பொதுமக்கள் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றாமை ஆகியவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்காததால் கடந்த காலங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாக காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் அதிகளவில் பரவத்தொடங்கியுள்ளது.
அலுவலருக்கு தொற்று
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் சேவூர் ரோட்டில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் வேலை பார்த்து வரும் ஒரு அலுவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதன் காரணமாக தாலுகா அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது. 
3 நாட்கள் அலுவலகம் மூடல்
மேலும் நேற்று முதல் 3 நாட்களுக்கு தாலுகா அலுவலகம் மூடப்பட்டது. தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு அலுவல்கள் காரணமாக தாலுகா அலுவலகம் வந்துசெல்கின்றனர்.
தாலுகா அலுவலகத்துக்கு நேற்று பல்வேறு அலுவல்களுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையம் மட்டும் செயல்படுகிறது.

மேலும் செய்திகள்