மின்சாரம் தாக்கி 4 பசு மாடுகள் சாவு

மின்சாரம் தாக்கி 4 பசு மாடுகள் பரிதாபமாக இறந்தன.

Update: 2021-04-12 14:52 GMT
முதுகுளத்தூர், 
முதுகுளத்தூர் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த குணசேகரன் மனைவி லட்சுமி. இவர் 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கமாக மேய்ச்சலுக்காக முதுகுளத்தூர் கண்மாய் பகுதியில் பசுமாடுகளை அழைத்துச்சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கிய 4 பசு மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லட்சுமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீட்பு பணி நடந்தது. சம்பவ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்