17 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 17 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 17 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 6 ஆயிரத்து 759 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இவர்களில் இதுவரை 6 ஆயிரத்து 456 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 165 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும் 138 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.