மாத்திரை சாப்பிட்டு விட்டு தண்ணீர் என நினைத்து திராவகத்தை குடித்த மூதாட்டி சாவு
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மேனகா.
ஆவடி,
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மேனகா (வயது 60). இவருக்கு கண் பார்வை குறைபாடு மற்றும் சர்க்கரை நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இவர், சர்க்கரை நோய்க்கான மாத்திரையை வாயில் போட்டுவிட்டு, தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை (ஆசிட்) எடுத்து குடித்து விட்டார்.
இதனால் தொண்டையில் வலி தாங்க முடியாமல் அலறிய மேனகாவை மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி மேனகா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.