வாழப்பாடியில் மக்கள் நீதிமன்றம்: 154 வழக்குகளுக்கு சமரச தீர்வு

வாழப்பாடியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 154 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.

Update: 2021-04-11 22:22 GMT
வாழப்பாடி:
நீதிமன்றங்களில் தேங்கியுள்ள சிறிய வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றம் வாயிலாக சுமுக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இயங்கும் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் சிறப்பு (மெகா லோக் அதாலத்) மக்கள் நீதிமன்றம் கூடியது.
நீதிமன்ற நடுவர் சந்தோஷம் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், 148 சிறிய குற்ற வழக்குகள், 6 சிவில் வழக்குகள் என மொத்தம் 154 வழக்குகள் சமரச பேச்சுவார்த்தை மூலம் முடித்து வைக்கப்பட்டது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.

மேலும் செய்திகள்