ஈரோடு மாவட்டத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா; ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-04-11 21:16 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 119 பேருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
மின்னல் வேகத்தில்...
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொதுமக்கள் வெளியில் வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்காததால் தற்போது தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.
119 பேருக்கு கொரோனா
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 119 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 940 ஆக உயர்ந்தது.
அதேநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 273 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனா வைரசுக்கு தற்போது 517 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும் செய்திகள்