சிவகிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம்
சிவகிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
சிவகிரி, ஏப்:
சிவகிரியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதி பிரியங்கா தலைமையில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இவற்றில் சிவில் மற்றும் குற்ற வழக்குகளில் நிலம் சம்பந்தமான பிரச்சனை, வாரிசு சான்று வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள் போன்ற பல வகையான குற்ற வழக்குகள் முடிக்கப்பட்டன. இவற்றில் 8 சிவில் வழக்குகள், 225 குற்றவழக்குகள் என மொத்தம் 233 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.