மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

Update: 2021-04-11 19:38 GMT
சோழவந்தான்
சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 70). இவர் செருப்புத் தைக்கும் தொழிலாளி. இவர் திருவாலவாயநல்லூர் கிராமத்திலிருந்து நெடுங்குளத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஆண்டி மீது மோதினர். இதில் படுகாயம் அடைந்த சம்பவ இடத்திலே ஆண்டி பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜசுலோசனா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்