பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்

தென்காசியில் தி.மு.க.சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Update: 2021-04-11 19:32 GMT
தென்காசி, ஏப்:
தென்காசி வடக்கு ரத வீதியில் நகர தி.மு.க. சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. நகர செயலாளர் சாதிர் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.
கடையநல்லூர் அருகே இடைகால் கிராமத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை தலைமை தாங்கி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழத்துண்டுகள் போன்றவற்றை வழங்கினார்.

மேலும் செய்திகள்