கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

பண்பொழி அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-11 19:29 GMT
அச்சன்புதூர், ஏப்:
பண்பொழி அருகே உள்ள கோட்டைதிரட்டு பகுதியைச் சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 50). அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). இவர் அய்யப்பனிடம் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு வருவதாக கூறி மணிகண்டன், அய்யப்பனிடம் முன்பணம் வாங்கிக் கொண்டு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வேலைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. 
இதுகுறித்து அய்யப்பன், அவரது மகன் மகேந்திர பூபதி (25) ஆகியோர் மணிகண்டனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சன்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்