முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
பேரையூர்
பேரையூர் போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள கல்லுப்பட்டி, பேரையூர், வில்லூர், சத்திரப்பட்டி, நாகையாபுரம், சாப்டூர், சேடபட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் கொரோனா முன்தடுப்பு நடவடிக்கையாக முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். முக கவசம் அணியாத 40 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். மேலும் அவர்களுக்கு முக கவசம் கொடுத்தனர். மேலும் முக கவசம் அணிவதன் அவசியத்தை பொறுமையாக எடுத்து கூறினார்கள். தொடர்ந்து முக கவசம் அணியாவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.