தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 153 வழக்குகள் பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிவகங்கை,
தமிழக சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மாவட்டத்தில் இதுவரை 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 46 வழக்குகள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 45 வழக்குகள், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 32 வழக்குகள், மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் 30 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பணம், பொருட்கள் கொடுத்ததாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகளை மீறி தனியார் சிலர் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளுக்கு பேனர் வைத்தது, ஆர்ப்பாட்டம் நடத்தியது உள்ளிட்ட வழக்குகளும் மற்றும் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.