நெல்லையில் 144 பேருக்கு கொரோனா
நெல்லை மாவட்டத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.;
நெல்லை, ஏப்:
நெல்லை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்றும் 144 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் உடனடியாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 940 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 982 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 741 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 217 பேர் பலியாகியுள்ளனர்.