மகாசபை கூட்டம்

பாபநாச கோவில் 9-ம் திருநாள் நாடார் மண்டகப்படி சங்க மகாசபை கூட்டம் நடந்தது.

Update: 2021-04-11 19:11 GMT
விக்கிரமசிங்கபுரம், ஏப்:
பாபநாசம் 9-ம் திருநாள் நாடார் மண்டகப்படி சங்க மகாசபை கூட்டம் நடைபெற்றது. 9-ம் திருநாள் மண்டகப்படி தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பொருளாளர் அய்யப்பன் வரவேற்றார். கூட்டத்தில் 2019-20-ம் ஆண்டிற்கான வரவு-செலவு கணக்கு வாசிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சித்திரை விசு திருவிழா நடத்துவது பற்றியும் கலந்துரையாடினர்.
இதில் தற்போது கொரோனா பரவி வரும் இத்தருணத்தில் அரசு அறிவிக்கும் அறிவிப்பின்படி நாம் திருவிழாவை கொண்டாடுவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் முன்னாள் தலைவரும், தட்சணமாற நாடார் சங்க இயக்குனருமான வைத்திலிங்கம், துணைச் செயலாளர்கள் குணசேகரன், சங்கரநயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்