கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை- கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

வள்ளியூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-04-11 19:02 GMT
வள்ளியூர், ஏப்:
வள்ளியூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கோவில் உண்டியல் உடைப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் சந்தன மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் சாமி கும்பிட வந்தனர். அப்போது, அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கோவிலில் வைக்கப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். 

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

அப்போது, அதில் இந்த சம்பவம் கடந்த 9-ந் தேதி நடந்தது தெரியவந்தது. மர்ம நபர் ஒருவர் கோவிலுக்குள் நுைழகிறார். அங்கு கயிறு மூலம் உண்டியல் கட்டப்பட்டு உள்ளது. அந்த கயிற்றை அவிழ்த்து, உண்டியலை வெளியே தூக்கி செல்கிறார். அங்குள்ள சாலையை கடந்து, மறைவான இடத்திற்கு செல்கிறார். பின்னர் மீண்டும் உண்டியலை கோவிலுக்கு கொண்டு வந்து இருந்த இடத்தில் வைத்து விட்டு செல்கிறார். இதுபோன்ற காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 
மேலும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் மர்மநபர் ெகாள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

போலீஸ் விசாரணை

உண்டியலில் உள்ள பணம் கடந்த ஒரு ஆண்டாக எண்ணப்படவில்லை. எனவே அதில் சுமார் ரூ.30 ஆயிரத்தும் மேல் இருந்திருக்கும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வள்ளியூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்