முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

சங்கராபுரத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;

Update: 2021-04-11 19:02 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் வருவாய்த்துறை சார்பில் பஸ்நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சையத்காதர் தலைமை தாங்கி கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்த 11 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது வருவாய் ஆய்வாளர் திருமால், கிராம நிர்வாக அலுவலர் நிமலன், சுகாதார ஆய்வாளர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்