நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர்
நாகை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் உள்பட 18 பேைர கடித்து குதறிய நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.
நாகப்பட்டினம், ஏப்.12-
நாகை புதிய பஸ்நிலையத்தில் பயணிகள் உள்பட 18 பேைர கடித்து குதறிய நாயை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.
நாயை அடித்து கொன்றனர்
நாகை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு டீக்கடையின் உரிமையாளர் ஒரு நாய் வளர்த்து வந்தார். இந்த நாய் நேற்று இரவு திடீரென்று அந்த கடையில் டீ குடித்தவர்களை விரட்டி, விரட்டி கடிக்க தொடங்கியது. அவர்கள் விரட்டியதும் அந்த நாய் நேராக பஸ்நிலையத்தில் நின்ற பயணிகளையும் ஒவ்வொருவராக விரட்டி, விரட்டி கடித்து அருகில் உள்ள கோர்ட் வளாகத்திற்குள் வந்தது.
உடனே அங்கிருந்தவர்கள் அந்த நாயை அடிக்க துரத்தினர். ஆனால் அவர்களிடம் இருந்து தப்பித்த நாய் நாகை அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் சென்றது. அங்குள்ளவர்கள் அந்த நாயை துரத்தவே மீண்டும் புதிய பஸ்நிலையத்தில் உள்ள அந்த டீக்கடைக்கு நாய் வந்தது. அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அந்த நாயை அடித்து கொன்றனர்.
18 பேர் மருத்துவமனையில் அனுமதி
நாய் கடித்ததில் காயம் அடைந்த 18 பேர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை நகர அ.தி.மு.க செயலாளர் தங்க கதிரவன் நாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக 18 பேரை கடித்த வெள்ளை நிறத்தால் ஆன நாயை துரத்தி சன்ற பொதுமக்கள், மற்றொரு வெள்ளை நிறத்தால் ஆன நாயை அடித்துக் கொன்றது பரிதாபக்குரியதாக இருந்தது.
நாகை புதிய பஸ் நிலையத்தில் நேற்று இரவு நடந்த இந்த சம்பவத்தால் பஸ் நிலைய பகுதி பெரும் பரபரப்புக்கு உள்ளானது.