ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் 6 பேர் உள்பட 50 பேருக்கு நேற்று ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
சிவகங்கை,
இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள் 6 பேர் உள்பட 50 பேருக்கு நேற்று ஒரே நாளில் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
50 பேருக்கு கொரோனா
இதில் அதிகபட்சமாக சிவகங்கையை அடுத்த இலுப்பைகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் உள்ள 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த மையத்தில் உள்ள 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது அவர்கள் சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
20 பேர் குணமடைந்தனர்
சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 126 பேர் சிகிச்சையில் இருந்தனர். இவர்களில் பூரண குணமடைந்த 20 பேர் நேற்று வீடு திரும்பினர்.