கார் பள்ளத்தில் கவிழ்ந்து சிறுவன் பலி
காரியாபட்டி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். குடும்பத்தினர் 3 பேர் காயம் அடைந்தனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். குடும்பத்தினர் 3 பேர் காயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்தது
மதுரை வளர்நகரை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45). இவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் அரசு வழக்கறிஞராக உள்ளார்.
இவர் தனது மனைவி மகேஸ்வரி (37), மகன் முகேஷ் (9), மகள் நிதன்யா (7) ஆகியோருடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மகன் முகேசுக்கு மொட்டை போட்டு விட்டு மதுரைக்கு காரில் வந்து கொண்டு இருந்தார். அப்போது காரியாபட்டியை அடுத்த கல்குறிச்சி அருேக வந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
சிறுவன் பலி
இந்த விபத்தில் முருகானந்தம், முகேஷ், மகேஸ்வரி, நிதன்யா ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சிறுவன் முகேஷ் பரிதாபமாக இறந்தார்.
முருகானந்தம் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.