ஆர்ப்பாட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-11 18:27 GMT
காரியாபட்டி, 
காரியாபட்டி தாலுகா மல்லாங்கிணறு அருகே மேல துலுக்கன்குளம் கிராமத்தில் உள்ள டாஸ்மாக்கடையை மூடக்கோரி பிசிண்டி ஊராட்சி மன்றத்தலைவி ராஜேஸ்வரி தலைமையில் 100-க்கு மேற்பட்ட பெண்கள் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், மல்லாங்கிணறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடையை மூடுவது குறித்து  உரிய அதிகாரிகளிடம் முறையாக மனு கொடுங்கள் என அவர்கள் கூறினர். மதுக்கடையை மூடாவிட் டால் தொடர்ந்து போராட் டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் கூறினர்.

மேலும் செய்திகள்