முக கசவம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு

முக்கூடல், திசையன்விளை பகுதியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-04-11 18:24 GMT
முக்கூடல், ஏப்:
முக்கூடல், திசையன்விளை பகுதியில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு நகரப்பஞ்சாயத்து நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் அபராதம் விதித்தனர்.

முக்கூடல்

நெல்லை மாவட்ட கலெக்டர் உத்தரவின்படியும், நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின்படியும் முக்கூடல் பேரூராட்சியின் செயல் அலுவலர் கந்தசாமி தலைமையில் பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மோகன், வரிதண்டலர் முருகன், சந்தனகுமார் சமுத்திர கணேசன், பிரேம்குமார் ஆகியோர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது பொது இடங்களில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். மேற்படி கொரனா வைரஸ் தொற்று குறித்து பேரூராட்சி வாகனம், ஆட்டோ முலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

திசையன்விளை

திசையன்விளை போலீசார் உடன்குடி ரோடு பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்ற 224 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
இதேபோல் உவரி போலீசார் உவரி சோதனை சாவடி மற்றும் ஆனைகுடி விலக்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முக கவசம் அணியாமல் சென்ற 89 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூலித்தனர்.

மேலும் செய்திகள்