வந்தவாசி; ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேர் கைது

வந்தவாசியில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலையில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாகனங்கள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-11 17:44 GMT
வந்தவாசி

வந்தவாசியில் நடந்த ஆட்டோ டிரைவர் கொலையில் 7 ேபரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வாகனங்கள், பயங்கர ஆயுதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ரகசிய தகவல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டைக்குள் தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் நசீர்கானை 10-க்கும் மேற்பட்ட கும்பல் முகமூடி அணிந்து வந்து அரிவாளால் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர். 

கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன் தலைமையில் வந்தவாசி இன்ஸ்பெக்டர் குமார், கொடுங்காலூர் இன்ஸ்பெக்டர் புகழ், தேசூர் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் 40 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. 
தனிப்படை போலீசார் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

கொலையாளிகள் வந்தவாசி-செய்யாறு சாலையில் உள்ள புரிசை ஏரிக்கரையில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கும்பலை சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு ஆட்டோ, 2 மோட்டார்சைக்கிள்கள், கோடரி, கத்தி, 3 அரிவாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 

7 பேர் கைது 

பிடிபட்டவர்கள் வந்தவாசி கோட்டைக்குள் தெருவைச் சேர்ந்த ஆதம் மகன் மஸ்தான் (வயது 22), காதர் மகன் நூருல்லா (32), பாபு மகன் ஜான் பாஷா (31), அப்துல் ஜப்பார் மகன் முகம்மது கனி (32), கோட்டை காலனியைச் சேர்ந்த கதிரவன் மகன் கவியரசு (28), வெண்குன்றம் பக்கிரி தர்காவை சேர்ந்த சர்தார் மகன் சதாம் உசேன் (28), அம்மையப்பட்டு பக்கிரி தர்காவை சேர்ந்த முகமது இஸ்மாயில் மகன் முகம்மது ரபி (32) எனத் தெரிய வந்தது.

அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்