அரூர் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
அரூர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்தினம் (வயது 57). விவசாயி. இவர் நேற்று குரங்குபள்ளம் என்ற இடத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.