மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய அரசு பள்ளி ஆசிரியர் கைது

மத்தூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-11 17:19 GMT
மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள ஜிஞ்சம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி. இவர் மனைவி, மகளுடன் திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் கிராமத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த 6-ந் தேதி சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க மாணவியுடன் அவரது சித்தி சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் கடந்த 9-ந் தேதி மீண்டும் மேல்செங்கத்திற்கு செல்ல மத்தூர் பஸ் நிலையத்திற்கு அவர்கள் வந்தனர். அப்போது மாணவி திடீரென மாயமானார். இது குறித்து அவரது சித்தி மத்தூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், தன்னுடன் வந்த சிறுமியை, திருவண்ணாமலை மாவட்டம் நாகனூர் கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வரும் சரண்ராஜ் (31) என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் கடத்தி சென்றிருக்கலாம். எனவே, அவரிடமிருந்து சிறுமியை மீட்டுத்தர வேண்டும் என புகார் அளித்தார்.
அதன் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து, ஆசிரியர் சரண்ராஜை கைது செய்தார். அந்த சிறுமியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்