கரூர்
கரூர் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் மகாலட்சுமி (வயது 21). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லூரிக்கு சென்ற மகாலட்சுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து மகாலட்சுமியை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்த தர்மராஜ் மகள் சினேகா (20). இவர் திருப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் கடைக்கு சென்று வருவதாக சொல்லி விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து தர்மராஜ் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.