வாலிபர் தீக்குளித்து தற்கொலை

வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-04-11 17:12 GMT
கீழக்கரை, 
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பனையங்காள் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பிரவீன் (வயது20). இவரும் பூலாங்குளத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதற்கு அவர்களது வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனை பிரிந்த பெண் கடந்த பிப்ரவரி மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்தநிலையில் மனமுடைந்து காணப்பட்ட பிரவீன் வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். உடனே அருகில் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தீக்காயத்துடன் பிரவீனை ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்