திருவனந்தபுரத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் 2 பேருக்கு மறுவாழ்வு

திருவனந்தபுரத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் மூலம் 2 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மறுவாழ்வு பெற்றனர். இதுபற்றிய விவரம் வருமாறு.

Update: 2021-04-11 17:03 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் நடந்த கார் விபத்தில் கொல்லம் நகரை சேர்ந்த அக்சானோ காயமடைந்து திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் திடீரென்று மூளைச்சாவு அடைந்தார்.

அவர் குடும்பத்தினர் அக்சானோவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

அதே சமயம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கிளிமனூர், கொடுவாசன்னூரை சேர்ந்த சுபீஷ் (வயது 32) மேனங்குளம், கழகூட்டத்தைச் சேர்ந்த ரோகித் மேத்யூ (24) ஆகியோர் சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று வந்தனர்.அவர்களுக்கு அக்சானோவின் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொறுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஒரே நேரத்தில் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து இருவருக்கும் பொறுத்தப்பட்டது.

சிறுநீரகத் துறை பேராசிரியர்கள் டாக்டர் வாசுதேவன் மற்றும் டாக்டர் சதீஷ் குருப் ஆகியோர் இந்த அறுவை சிகிச்சைக்கு தலைமை தாங்கினர். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நேரத்தில் இரண்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

சிறுநீரகத்தை நன்கொடையாக வழங்கிய அக்சானோவின் குடும்பத்தினருக்கு சிறுநீரகம் தானம் பெற்று மறு வாழ்வு பெற்றவர்களின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்